Saturday, November 6, 2010

அவிநாசி பற்றி



அவிநாசி (ஆங்கிலம்:Avanashi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபேரூராட்சி ஆகும். இங்கு சுந்தரபாண்டியன்-ஆல் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.

பொருளடக்கம்
வரலாறு
வரலாறு
கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் அவிநாசியும் ஒன்றாகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11.2° N 77.28° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314 மீட்டர் (1030 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
1.     "Avanashi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
2.     "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.



     சிவஸ்தலம் பெயர் :    அவிநாசி (திருப்புக்கொளியூர்)
      இறைவன் பெயர் :      அவிநாசியப்பர்
         இறைவி பெயர் :     கருணாம்பிகை
     எப்படிப் போவது :   கோயமுத்தூரில் இருந்து சுமார் 40 Km தொலைவில் கோயமுத்தூர் - திருப்பூர் சாலையில் அவிநாசி உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் (8 Km) கோயமுத்தூர் - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.
    சிவஸ்தலம் பெயர் :   அவிநாசி (திருப்புக்கொளியூர்)
   மற்றவை   தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
     உங்களிடமிருந்துதேவை    இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் 
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
   ஆலயம் பற்றி :
   கோவில் அமைப்பு: தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன. மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. இறைவி கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம்.
    தல புராண வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர். மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபனயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். பிறகு 4வது பாடலாக
உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார்
தங்கள் உச்சியாய் அரைக்காடு அரவா !
ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப்
பிள்ளைதரச் சொல்லு காலனையே
    என்று இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அதனூடே வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை இப்போது பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவஸ்தலம் தான் அவிநாசி என்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூர்.

அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் ஒரு சிறிய கோவிலில் சுந்தரருக்கு சந்நிதி உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப் பிள்ளையை அழைத்த திருவிளையாடல் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.



1 comments:

Sudhahar Sambamoorthy Rao said...

அவிநாசி தேரை பற்றி பகிருங்களேன்.நான் சிறுவனாக இருந்த போது அவிநாசி தேர் எரிந்து போனதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப்பற்றியும்...

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms